2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

பாப்பரசருக்கு ஜனாதிபதி மஹிந்த அழைப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு பாப்பரசர் பிரான்ஸிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்புவிடுத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலக பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

பாப்பரசர் பிரான்ஸிஸ் ஆசிய நாடுகளுக்கு அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் விஜயங்களை மேற்கொள்ளவிருக்கின்ற நிலையிலேயெ இலங்கைக்கும் விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அழைப்புவிடுத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளதாக பாப்பரசர் பிரான்ஸிஸ் கடந்தவாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயம் செய்வாராயின் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளும் மூன்றாவது பாப்பரசராக பிரான்ஸிஸ் கருதப்படுவார்.

நான்காவது போல் பாப்பரசர் இலங்கைக்கு 1977 ஆம் ஆண்டு முதன்முறையாக விஜயம் செய்தார்.

அதன் பின்னர் 1995 ஆம் ஆண்டு பாப்பரசர் இரண்டாம் ஜோன் போல் இலங்கைக்கு விஜயம் செய்தார் அவரது விஜயத்திற்கு பௌத்த பிக்குகள் தங்களுடைய கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியமையினால்  குண்டு துளைக்காத வாகனத்திலேயே அவர் இலங்கையில் பயணம் செய்யவேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--