2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் பங்கேற்கார்?

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்தமாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பந்குபற்றுவதற்கு எதிராக எதிர்ப்புகள் அதிகரித்துவரும் நிலையில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மாநாட்டிற்கு அநேகமாக வரமாட்டார் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காங்கிரஸ்சின் நீண்டகால கூட்டணிக்கட்சியான தி.மு.க ஆகியவற்றின் அழுத்தம் காரணமாக அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை மீளாய்வு செய்யவுள்ளது எனக் கூறப்படுகிறது.

பிரதமரும் அவரது காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களும் இந்த பிரச்சினை பற்றி ஒரு மாதமாக பேசிவருகின்றனர். பிரதமர் இந்த கூட்டத்திற்கு அநேகமாக போக மாட்டாரென எமக்கு தெரியவந்தது என ஒரு மத்திய அமைச்சர் ரைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு கூறினார்.
அநேகமாக இந்திய பிரதமர் தமது உப ஜனாதிபதி அன்ஸாரி மற்றும் வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் ஆகியோரை மாநாட்டில் பங்கேற்க அனுப்பலாம் என அவர் கூறினார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--