2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

வாஸிற்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

Super User   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எஸ்.செல்வநாயகம்

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவிற்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என சட்டமா அதிபர் மேன் முறையீட்டு நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை அறிவித்தார்.

மாலபே தனியார் பல்கலைக்கழக மாணவன் நிபுண ராமணாயக்கவை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியமைக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என சட்டமா அதிபர் தெரிவித்தார்.

வாஸ் குனவர்த்தனவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்துமாறு கோரி நிபுண ராமணாயக்க மற்றும் அவரது தாயார் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைகளின்போதே சட்டமா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--