2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

சி.விக்கு இடைக்கால தடை

Kanagaraj   / 2014 மார்ச் 25 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரினால், மாகாண நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக விடுக்கப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. 

வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி ஆர்.விஜயலட்சுமியால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சரினால், வடக்கு மாகாண நிர்வாக நடைமுறைகள் தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம் தனது உரித்துக்கள் பறிக்கப்படுவதாக பிரதம செயலாளர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .