2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

தீர்மானத்துக்கு இணங்கி செயற்படவும்: அமெரிக்கா

Menaka Mookandi   / 2014 மார்ச் 28 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இலங்கைக்கு எதிரானது என்று வெளியிடப்படும் கருத்து முற்றிலும் தவறானது. இது, இலங்கையின் ஜனநாயகம் மற்றும் இறைமையை அபிவிருத்தி செய்வதற்கான தீர்மானமாகும் என்று அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் மிச்செல் ஜே. சிசன் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கமானது இந்த தீர்மானத்துடன் இணங்கி செயற்படும் என்ற நம்பிக்கை அமெரிக்காவுக்கு உள்ளது எனவும் மிச்செல் ஜே. சிசன் குறிப்பிட்டார். 

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போண்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம், இலங்கைக்கு எதிரானது அல்ல. இலங்கையினால் இதுவரையில் பேணப்பட்டு வந்த ஜனநாயகம் மற்றும் இறைமையை அபிவிருத்தி செய்வதற்கான தீர்மானமாகும்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், துன்புறுத்தல்கள், வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இலங்கை அரசு உட்பட அதனுடன் தொடர்புடைய மேலும் சில குழுக்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். காரணம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நாம் தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது' என்று சிசன் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .