2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

நாடாளுமன்றத்தை பகிஷ்கரிக்க திட்டமிடவில்லை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 09 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை பகிஷ்கரிக்க திட்டமிட்டுள்ளனர் என புதன்கிழமை (09) பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததை வாசித்து நான் ஆச்சரியமடைந்தேன் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு தீர்மானம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எடுக்கப்படவில்லை. இந்த நாட்டில் சமாதானத்தையும்  சாந்தியையும் கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் அரசாங்கத்தில் உள்ள சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுதுணையாக உள்ளனர்.

இது  துர்நோக்குள்ள செய்தியாகும். இது  கற்பனையானது. குறிப்பாக ஜெனிவா  எம்மை விழுங்க முயலும் இந்த நேரத்தில் எமது நாட்டின் ஒற்றுமையை அழிக்க முயலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் வேறு அரசுக்கு எதிரான சக்திகளின் சதிவேலைகளையிட்டு முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க  வேண்டும்.
 
தமிழீழ விடுதலை புலிகளின் யுத்தம் நடந்த 30 வருட காலத்தில் கிழக்கு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் முஸ்லிம்கள் ஆகவும் கூடுதலாக பாதிக்கப்பட்டனர் என்பதை முஸ்லிம்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

முஸ்லிம்களின் விவசாய வர்த்தக முயற்சிகள் புலிகளால் நாசப்படுத்தப்பட்டன. புனித குர்ஆன் பிரதிகளுடன் சென்றவர்கள் மன்னம்பிட்டி பாலத்தில்  நிறுத்தப்பட்டு  புனித நூல்களை முகரும் படி பொலிஸ் நாய்கள் ஏவி விடப்பட்டன. இது இந்நாட்டில் முஸ்லிம் வரலாற்றில் ஆகவும் இருண்ட சகாப்தமாகும்.

தமது பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்திய தமிழ் பயங்கரவாதிகளின் அழிவு பாதையில் போய் அதளபாதாளத்தில் விழ முஸ்லிம்கள் தயாராகவில்லை.

தமிழீழ விடுதலை புலிகள் அப்பாவி தமிழ் மக்களை பெரும் துன்பத்துக்கு ஆளாக்கியதே கண்ட பலன். சகல அரசாங்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும்  எந்தவொரு வெளிநாட்டு சதிகாரர்களுக்கும் எதிராக எங்கள் தாய்நாட்டை காக்க அணி திரண்டுள்ளனர்.

ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவந்த  பிரேரணைக்கு ஆதரவாக  எந்தவொரு முஸ்லிம்களும் வாக்களிக்கவில்லை என்பதை நினைவில் கொள்வோம்.

  Comments - 0

 • kb Thursday, 10 April 2014 03:05 AM

  இவரிட்டைக் கதைச்சு வேலை இல்லை என்று மற்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைச்சிருப்பினம்.

  Reply : 0       0

  ஹம்மாது Thursday, 10 April 2014 05:21 AM

  //புனித குர்ஆன் பிரதிகளுடன் சென்றவர்கள் மன்னம்பிட்டி பாலத்தில் நிறுத்தப்பட்டு புனித நூல்களை முகரும் படி பொலிஸ் நாய்கள் ஏவி விடப்பட்டன. இது இந்நாட்டில் முஸ்லிம் வரலாற்றில் ஆகவும் இருண்ட சகாப்தமாகும்//
  ஜுப்பா அணிந்த பொம்மையில் அல்லாஹ் என்று எழுதி அதை ஊர்வலத்தில் கொண்டுபோய் நெருப்பு வைத்த இருண்டகாலத்தை
  ஹாஜி மறந்துவிட்டீர்போல் தெரிகிறது.

  Reply : 0       0

  Abu sama Thursday, 10 April 2014 06:01 AM

  இவர் போன்றவர்களால் வால் பிடிக்க மட்டும் தான் முடியும். சமூகத்துக்கு எதுவித பலனும் இல்லை.

  Reply : 0       0

  Ash Thursday, 10 April 2014 07:14 AM

  ஐயா, நீங்க எந்த ஆட்சி வருகிறதோ அதற்கு பின்னால் செல்பவராச்சே...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X