2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் போலியோ முற்றாக ஒழிப்பு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலியோ நோய் முற்றாக ஒழிக்கப்பட்ட ஆசிய வலய நாடாக இலங்கை பதியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், இலங்கை உட்பட 11 நாடுகளில் போலியோ வைரஸ் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1944ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது போலியோ நோயாளி இனங்காணப்பட்டார். அதன் பின்னர் அவ்வருடத்திலேயே மேலும் நான்கு பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .