2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஜனாதிபதி மாளிகையிலிருந்த மெக்கோ கிளிகளை காணவில்லை

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வளர்க்கப்பட்டு வந்த மெக்கோ ரக கிளிகள் நான்கு, அங்கிருந்து பறந்து சென்றுவிட்டதாக ஜனாதிபதி மாளிகையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு பறந்து சென்ற கிளிகளில் இரண்டு சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கலவைகளைக் கொண்டவை எனவும் ஏனைய இரண்டும் நீலம் மற்றும் மஞ்சள் நிறக் கலவைகளைக் கொண்டவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கிளிகள் தொடர்பில் தகவல் அறிந்தால், 0777 – 535377 என தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு பேச்சாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--