2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

நான்காவது கிளியும் கண்டுபிடிக்கப்பட்டது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மாளிகையிலிருந்து பறந்துசென்ற நான்கு மெக்கோ கிளிகளில் நான்காவது கிளியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனையிலுள்ள வீடொன்றிலிருந்தே இந்த கிளி இன்று வெள்ளிக்கிழமை கண்டுப்பிடிக்கப்பட்டு கொட்டாஞ்சேனை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த கிளியை கொட்டாஞ்சேனை பொலிஸாரே ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைத்துள்ளனர். புதன்கிழமையன்று காணாமல் போன நான்கு கிளிகளில் மூன்று கிளிகள் நேற்று வியாழக்கிழமை கண்டுப்பிடிக்கப்பட்டன.

இந்த கிளிகள் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியானவை எனவும் ஜனாதிபதி மாளிகை வட்டார தகவல்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--