2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இருவர் மரணம்; ஐவர் காயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாரம்மல, ஓஹல்பொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் மரணமடைந்ததுடன், 05 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியொன்று ஜீப் வாகனத்துடன் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சனிக்கிழமை (19) இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கிரிந்தான மற்றும் அனுக்கனே பகுதிகளைச் சேர்ந்த 90 மற்றும் 50 வயதுடையவர்களே மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, ஜீப் வண்டியின் சாரதியை கைதுசெய்துள்ள நிலையில், அவரை இன்றையதினம் குளியாப்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--