2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

"கிழக்கில் மின்வழங்கும் திட்டங்கள் பாதித்தமைக்கு அமெரிக்காவே காரணம்"

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கெலும் பண்டார, யோஹான் பெரேரா

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவிருந்த கிராமிய மின்வழங்கும் திட்டங்களுக்கு நிதி வழங்கவிருந்த ஈரான் மீது, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக அத்திட்டங்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று (25) தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கிராம மின் வழங்கும் திட்டங்களை செயற்படுத்துவதற்கு தேவையான மின் உபகரணங்கள் மற்றும் பொருட்களை ஈரானிடமிருந்து கொள்வனவு செய்ய முடியாதிருப்பதாக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பதிலளித்த போதே மின்வலு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேற்கண்டவாறு கூறினார்.

கிழக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு மின் இணைப்பை பெறும் உதவிகள் வழங்கப்படுமா என சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பிய போது இவ்வாறான உதவிகள் சமூர்த்தி திட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--