2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

பிரேரணைகளுக்கு ஹெல உறுமய எதிர்ப்பு: விமல், ஹக்கீம் இல்லை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

செயல்நுணுக்க அபிவிருத்தித் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளையை அங்கீகரிப்பதற்கான இரண்டு பிரேரணைகளும் நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டன.

பிரேரணைகளுக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) மற்றும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஆகியன வாக்களித்தன.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி வாக்கெடுப்பின் போது அவையில் இருக்கவில்லை.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின் அத்துரலிய ரத்னதேரர் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் பிரேரணைகளுக்கு எதிராக வாக்களித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--