2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

புலி முக்கியஸ்தர் நால்வர் மலேசியாவில் கைது

Kanagaraj   / 2014 ஜூலை 04 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசிய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்த முக்கிய உறுப்பினர்களில்  ஒருவர், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்கவை 1999 ஆம் ஆண்டு படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மற்றொருவர் வெடி குண்டு தொடர்பான நிபுணர் எனவும், இவரிடம் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவன அடையாள அட்டை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .