2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி விபத்தில் குழந்தை மரணம்

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி-கல்மடு வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடக்கச்சி, மாதா தேவி வீதி மாயனூரைச்சேர்ந்த இரண்டடை வயது குழந்தையான ஜீவானந்தன் கம்சன் மரணமடைந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மகனான இரண்டரை வயது குழந்தையை அவரது தந்தை, மோட்டார் சைக்கிளின் முன்னால் வைத்துகொண்டு பயணித்தபோதே அந்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று மாலை 3.15க்கு  இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலே குழந்தை மரணமடைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .