2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

இலக்கங்களை மாற்றும் 'ஜில்மாட்' திட்டம்: சஜித்

Thipaan   / 2014 ஒக்டோபர் 24 , பி.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வரவு- செலவுத்திட்டமானது 'செலவு' இலக்கங்களை மாற்றும் 'ஜில்மாட்' திட்டமாகும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவரும் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சகலருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரான ஜனாதிபதி யோசனைகளை முன்மொழிந்தாலும் அது மக்களுக்கு கிடைக்காது. இதன் மூலமாக மக்கள் சிக்கி சின்னாப்பின்னமாவது மட்டுமே மிச்சமாகும் என்றார்.

நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, 2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியதன் பின்னர், எதிரணியை பார்த்து எப்படி பாங்கறியாதவனின் திட்டம் எப்படியென்று வினவினார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .