2021 மார்ச் 06, சனிக்கிழமை

'எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை அமுல்படுத்த செயலகம் உதவும்'

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 27 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி) பரிந்துரைகளின் அமுலாக்கத்திற்கு தேவைக்கேற்றவாறு தொடர்ந்தும் உதவுவதற்கு பொதுநலவாய செயலகம் தயாராக இப்பதாக அவ்வமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருக்கு இடையில் அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தின் சர்வதேச ஊடக அலகு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்தாண்டு நவம்பரில் கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு 2013 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட நோக்கங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் தற்போதய தலைவரான ஜனாதிபதியிடம் செயலாளர்; நாயகம் ஷர்மா விளக்கமளித்தார்.

பொதுநலவாய  அரசத் தவலைர்களின் மாநாடு ஒன்றிலிருந்து விளையும் பணிகளுக்கான வழக்கமான 'சுகாதாரப் பரிசோதனை' என இதை விவரித்துள்ளார். இந்தப் பரிசோதனை 'வெற்றிகரமானது' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அவர் அறிக்கையொன்றை கையளித்துள்ளார்.

ஈராண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் இந்தச் சந்திப்பின் கால அளவு, பங்கு பற்றலின் மட்டம் ஆகியன சம்பந்தமான விடயங்கள் உள்ளடங்கலாக பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டின்  மறுசீரமைப்புக்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு, செயலாளர் நாயகம் தகவலளித்தார்.
இலங்கையில் இடம்பெறும் முன்னெடுப்புக்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கருத்துரைத்த அவர், பொதுநலவாய செயலகம்,  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கிடையிலான இணைந்த செயற்பாடுகள் மிகுந்த பயனளிப்பனவாக இருப்பதாக தெரிவித்தார்.
இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி) பரிந்துரைகளின் அமுலாக்கத்தில் தொடர்ந்தும் உதவுவதற்கு செயலகம் தயாராக இப்பதாகவும் அவர், ஜனாதிபதியிடம் தெரிவித்தார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Comments - 0

  • cruso Tuesday, 28 October 2014 03:36 AM

    இதை அமுல்படுத்தினால் தானே உங்கள் உதவி தேவைப்படும். நீங்கள் பேசாமலே இருக்கலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .