2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினைகள் மத்திய அரசிடம்

Kanagaraj   / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை-இந்திய மீனர்வர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு  இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பதற்காக இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுள்ளதாக இந்திய செய்தி தெரிவிக்கின்றது.


இந்திய மீனவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு இந்திய நாடாளுமன்ற நிலையியற் குழு தயாராகி வருவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய நாடாளுமன்ற நிலையியற் குழு தற்போது இராமநாதபுர பிரதேசத்துக்கு சென்று மீனவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான தகவல்களை திரட்டிவருகின்றது. 


அந்த தகவல்களை அடிப்படையாக கொண்டே இந்திய நாடாளுமன்ற நிலையியற்குழு மத்திய அரசாங்கத்துக்கு அறிக்கை  சமர்ப்பிக்கவிருக்கின்றது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .