Kanagaraj / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
தலவாக்கலையில் ரயில் தண்டவாளத்தை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மீது பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தலவாக்கலை பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி சென்ற இளைஞன், மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் பாய்ந்து காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவத்தில், பொலிஸார் நடந்துகொண்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் தண்டவாளத்தை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பொலிஸ் விளக்கம்
இதேவேளை, தலவாக்கலை ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டதாக வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என்று நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அனுர அபேவிக்ரம மற்றும் தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.கே. ஹெட்டியாராச்சி ஆகியோர் தமக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










7 hours ago
9 hours ago
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
30 Oct 2025