Kanagaraj / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாவனெல்லை பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்து ஒன்றில் கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹெம்மாத்தகம பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய மயுர சுரங்க பிரதீப் என்ற கிராம சேவகரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற அவர், தனியார் பஸ் வண்டி ஒன்றை முந்திசென்றபோது எதிரே வந்த வானில் மோதி வீதியில் விழுந்துள்ளார். ஏககாலத்தில் பின்னே வந்துகொண்டிருந்த பஸ் வண்டியில் (அவர் முந்திவந்த பஸ்) மோதுண்டே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து சம்பந்தமாக பஸ் வண்டியின் சாரதியை கைது செய்துள்ளதாக தெரிவித்த மாவனெல்லை பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago