2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

வாக்காளர் அட்டைகள் இன்று விநியோகம்

Gavitha   / 2015 ஜூலை 29 , மு.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று புதன்கிழமை (29) தபால் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

இம்முறை தேர்தலுக்காக, ஒருகோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 491 வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார்.

தபால் ஊழியர்கள், ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை வீடுகள் தோறும் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கவுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன கூறினார்.

வாக்காளர் அட்டை விநியோகிப்பதற்கான விசேட தினங்களாக ஓகஸ்ட் 2ஆம் மற்றும் 9ஆம் திகதிகள் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .