2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

'கொட்டியா'வின் ஹெரோயினுடன் அழகு மங்கை கைது

Gavitha   / 2015 ஜூலை 29 , மு.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கொட்டியா' என்றழைக்கப்படும் நபரொருவருக்கு சொந்தமானதெனக் கூறப்படும் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண்ணொருவரை பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்த சம்பவமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை குறித்த பெண் வைத்திருந்ததாக பொலிஸார் கூறினர்.

மேற்படி ஹெரோயின் போதைப்பொருளுக்கு சொந்தக்காரராக கொட்டியா என்றழைக்கப்படும் நபரின் சகோதரனது காதலியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது இடம்பெறும்போது கொட்டியாவின் மற்றுமொரு சகோதரரும் அப்பெண்ணுடன் இருந்துள்ளார் என்றும் பொலிஸார் கூறினார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்த பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .