2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

சிறுபான்மையின நிறங்களற்ற கொடி விவகாரம்; துசித குமாரவுக்கு பிணை

Princiya Dixci   / 2015 ஜூலை 31 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுபான்மை இனங்களை பிரதிபலிக்கும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகளை  பறக்கவிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட, யட்டிநுவர பிரதேச சபை தலைவர் துசித குமார வலகெதரவை  10,000 ரூபாய் பிணையில் செல்லுமாறு கண்டி பிரதான நீதவான், நேற்று வியாழக்கிழமை (30) உத்தரவிட்டார்.

யட்டிநுவர பிரதேசத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேய  சிறுபான்மை இனங்களை பிரதிபலிக்கும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

நடுவில் சிங்கமும் நான்கு மூலைகளில் அரச இலைகளும் மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருந்த கொடி, கடந்த திங்கட்கிழமை (27) குறித்த கூட்டத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர், இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்காக அவ்ஆணைக்குழுவுக்கு சென்ற பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து, ஆணைக்குழுவுக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போதும் தேசியக்கொடியென்று மேற்படி கொடியையே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .