2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

அமெரிக்க விமானங்களை தவறுதலாக சுட்டுவீழ்த்திய குவைத்

Freelancer   / 2026 மார்ச் 03 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் தவறுதலாகச் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் 01 தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், அந்த விமானங்களில் இருந்த ஆறு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதுடன், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஆரோக்கியத்துடன் உள்ளனர் என எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை குவைத் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மீட்புப் பணிகளில் குவைத்  பாதுகாப்புப் படைகள் வழங்கிய ஒத்துழைப்பிற்கு அமெரிக்கா நன்றியைத் தெரிவித்துக்கொண்டது.

மேற்படி சம்பவத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .