2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஐ.ம.சு.கூ ஒரு பசுத்தோல் போர்த்திய புலி: கரு ஜயசூரிய

Princiya Dixci   / 2015 ஜூலை 31 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பது பசுத்தோல் போர்த்திய புலியாகும் என தெரிவித்த அமைச்சர் கரு ஜயசூரிய, இந்நாட்டு மக்களிடையே உள்ள ஒன்றுமையை சீர்குலைக்க கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் செயற்பட்டு வருகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.  

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் ஜயசூரிய, 'இந்நாட்டின் கலாசாரம், நற்குணங்கள், மனித நேயம் போன்றவற்றை சீர்குலைத்துவிட்டு பதவிக்காக எந்தவொரு மோசடி நடவடிக்கையிலும் ஈடுபட மஹிந்த ராஜபக்ஷவும் அவரது கூட்டாளிகளும் தயாராக உள்ளனர்' என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

நல்லாட்சியொன்றை நடத்துவது தொடர்பில் மஹிந்த தரப்பினருக்கு எவ்வித தேவையும் இல்லை என்று அமைச்சர் ஜயசூரிய, தனது அறிக்கையில் மேலும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .