2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

மரணவீட்டுக்கு சென்று திரும்பிய கார் விபத்து: இருவர் பலி

George   / 2015 ஜூலை 31 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிரிஸ்ஸ பண்டாரமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

மாத்தறை, கபுகம பிரதேசத்திலிருந்து காலி பிரதேசத்திலுள்ள மரண வீட்டுக்கு வந்துவிட்டு திரும்பிச்சென்றவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் சென்ற கார், எதிரேவந்த லொறியில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சகோதரனும், சகோதரியும் உயிரிழந்துள்ளதுடன் சகோதரனின் இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இரண்டு சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .