2025 நவம்பர் 27, வியாழக்கிழமை

நல்லாட்சியில் இதுவரை இரகசிய கொலைகள் இல்லை

Thipaan   / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனவரி 08ஆம் திகதி உருவாகிய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இதுவரை எந்தவொரு தாக்குதல், காணமல் போதல், இரகசிய கொலை மற்றும் வெள்ளை வான் கடத்தல்கள் இடம்பெற்றதாக தகவல் இல்லை என நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின்  செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பிரகீத் எக்னெலிகொட, லசந்த விக்ரமதுங்க உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், சாதாரண மக்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலைசெய்த நபர்கள், பீதியின் காரணமாக மீண்டும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முன்வரவில்லை எனவும் அவர் கூறினார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மகா சங்கரத்ன தேரர்களுக்கு தானம் வழங்கிவிட்டு இங்கு கருத்து தெரிவிக்கையில் இவர் இதனை கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X