2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

JVP யின் இதயசாட்சியில் போலியான FB

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணி (JVP)யின் இதயசாட்சி என்னும் பெயரில் போலியான முகப்புத்தக (FB) கணக்கு திறக்கப்பட்டுள்ளதாக  அக்கட்சி அறிவித்துள்ளது. 

அந்த கணக்கில் தங்களுடைய விலாசம், தொலைப்பேசி இலக்கம், தொலைநகல் இலக்கம் ஆகியனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. 

இந்த போலியான கணக்கை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சி, தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. 

எனினும், அந்த முகப்புத்தக கணக்கானது நேற்று புதன்கிழமை நண்பகலுடன் செயற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X