2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

கூட்டமைப்பிலிருந்து நால்வர் நீக்கம்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ், மாகாண சபை உறுப்பினர்களான நிஷாந்த வர்ணசிங்க, நிரோஷா அத்துகோரல மற்றும் ஹிருணிகா பிரேமசந்திர ஆகியோரை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இன்றிலிருந்து நீக்குவதாகவும் அவர்களுக்கான கடிதங்கள் தபாலிடப்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் இந்த தீர்மானம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிஷாந்த வர்ணசிங்க, நிரோஷா அத்துகோரல மற்றும் ஹிருணிகா ஆகிய மூவரும் சட்டபூர்வமாகவும் தார்மீகமானமுறையிலும் மாகாண சபை உறுப்பினர்களாக செயற்படமுடியாது என்றும் இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் எடுக்கும் முடிவையடுத்து விருப்பு வாக்குகளில் அவர்களுக்கு அடுத்ததாக இருப்பவர்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுசில்பிரேமஜயந்த தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .