2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

அவுஸ்திரேலிய பிரஜையிடம் ரூ. 133 இலட்சம் மோசடி

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பிரஜையிடம் ஒரு இலட்சம் டொலரை ( ரூ.133,67822) மோசடி செய்த குற்றச்சாட்டில் சட்டத்தரணியொருவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலிய பிரஜையொருவர் இலங்கையைச்சேர்ந்த அரசியல்வாதி, சட்டத்தரணி மற்றும் மற்றுமொரு நபருடன் இணைந்து நிறுவனம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

அந்த நிறுவனத்தை முறைக்கேடான முறையில் தன்னுடைய பெயருக்கு எழுதியே சட்டத்தரணி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிறுவனத்தில் உள்ள நபரொருவரினால் அவுஸ்திரேலிய பிரஜைக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக ஏமாற்றியே நிறுவனத்தை சட்டத்தரணி, தன்னுடைய பெயருக்கு எழுத்திவைத்துள்ளதாகவும்  அவுஸ்திரேலிய பிரஜை அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டதாக தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .