2021 மார்ச் 04, வியாழக்கிழமை

ஆட்கொணர்வு மனு தள்ளுபடி

Gavitha   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய, நேற்று செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவில் வீட்டில், இளவயது பிள்ளையை தடுத்துவைத்திருப்பதாகவும் தன்னுடைய மகளை ஆஜர்படுத்துமாறு கோரியும் அந்த பிள்ளையின் பெற்றோர் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்த பெற்றோர் அந்த முறைப்பாட்டையும் மனுவையும் வாபஸ் பெற்றுகொண்டதை அடுத்தே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .