2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

ஓட்டமாவடியில் துப்பாக்கிச் சூடு; குடும்பஸ்தர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஹூதாப் பள்ளி புகையிரத வீதிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை (15) நண்பகல் 12.15 மணியளவில் நடைபெற்றுள்ளது.
 
ஓட்டமாவடி பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த முகம்மட் அமீன் (37 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
 
அவ்விடத்தில் மறைந்து நின்ற இனந்தெரியாத இளைஞர் ஒருவர் தன்னிடமிருந்த துப்பாக்கியினால் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
 
துப்பாக்கிதாரியை கைது செய்யும் பொருட்டு பொலிஸார் பொது மக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

இச்சம்பவத்தின் பின்னணி தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .