2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

'விமல், தினேஷ், வாசு எதிர்க்கட்சியிலேயே இருப்பர்'

Gavitha   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்ற விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன மற்றும் வாசுதேவ  நாணயக்கார உட்பட்ட பலர், எதிர்க்கட்சியில் இருப்பதற்கு ஏற்கெனவே முடிவெடுத்துள்ளதாக, பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பலரும் எதிர்க்கட்சியிலேயே இருப்பர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு, தேசிய அரசாங்கத்துடன் இருப்பதா அல்லது எதிர்க்கட்சியில் இருப்பதா என்று தெரிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .