Gavitha / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை, கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படும், கிரிதலை இராணுவ முகாமின் ஆயுதப் படை இராணுவப் புலனாய்வு முகாமைப் படமெடுப்பதற்கும் அந்த முகாமில் பேணப்பட்ட புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கும், ஹோமாகம நீதவான் ஆர்.பி நெலுந்தெனிய, இரகசியப் பொலிஸாருக்கு அனுமதியளித்தார்.
இந்த விசாரணைகளை முன்னெடுக்கின்ற இரகசியப் பொலிஸ் அதிகாரிகளுக்கு, தேவையான வசதி வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்து, அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பதற்கு, இராணுவத்தின் பொலிஸ் அதிகாரிகனை பயன்படுத்துமாறு நீதவான், இராணுவத் தளபதிக்குப் பணிப்புரை விடுத்தார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவினால் இரகசியப் பொலிஸாருக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த விசாரணையில் வெளியான தகவல்களின் அடிப்படையில், லெப்டினன்ட் கேணல் இருவர் உள்ளிட்ட, புலனாய்வு அதிகாரிகள் குழு, இரகசியப் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கை, இரகசியப் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளர் சார்பில், இரகசியப் பொலிஸாருடன் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி திலிப பீரிஸ், கடத்திச் செல்லப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கிரிதலை இராணுவ முகாமின் ஆயுதப் படை இராணுவப் புலனாய்வு முகாமில், தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக, தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆகையினால் அதைக் கண்காணித்து, அவ்விடத்தைச் சோதனைக்கு உட்படுத்துவதற்கும் புகைப்படமெடுப்பதற்கும் அனுமதியளிக்குமாறு கோரி நின்றார்.
கிரிதலை இராணுவ முகாமின் ஆயுதப் படை இராணுவப் புலனாய்வு முகாமின் பிரதான வாயிலில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில், விடுமுறை பெற்றுச் செல்வோரின் விவரங்கள், முகாமில் இருந்தோரின் விவரங்கள், உட்சென்ற மற்றும் வெளிச்சென்ற வாகனங்களின் விவரங்கள், 20 கிலோ மீற்றருக்கு அப்பால் செல்வதற்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதி உள்ளிட்டவை தொடர்பில், ஏனைய அதிகாரிகளுக்கு உணவுகளுக்காக வழங்கப்பட்ட செலவு விவரங்களுக்கான பட்டியல்களையும் ஆராய்வதற்கு அனுமதிக்குமாறு, நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
5 minute ago
7 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
7 minute ago
34 minute ago