2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிக்கு, இடுப்பிலேயே அடித்த பெண் பொலிஸ்

Kanagaraj   / 2016 ஜூலை 16 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் வல்லுறவுக்கு உட்பட்ட விடயத்தை சட்ட வைத்திய அதிகாரியிடம் கூறக்கூடாது என கோரி, பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னை பலமுறை இடுப்பில் அடித்ததாக பஸ் நடத்துனர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியொருவர் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த  ஜுன் மாதம் 19 ஆம் திகதி மேற்படி 14 வயது சிறுமி, பாடசாலை பஸ்ஸின் சாரதியொருவரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை பொலிஸாரிடம் கூறினால் பெற்றோரை கொன்றுவிடுவதாக அந்நபர் சிறுமியை அச்சுறுத்தியுள்ளார்.

எனினும், சிறுமி தனக்கு நேர்ந்த விடயத்தை பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து பெற்றோர், ஹப்புத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் சிறுமி ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட தான், முறைப்பாடு செய்வதற்காக கடந்த 7ஆம் திகதியன்று ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்துக்குச் சென்றபோது,  பெண் பொலிஸ் கான்ஸடபிள் ஒருவர் தன்னை அடித்துவிட்டு சட்ட வைத்தியர் முன் கூட்டிச் சென்றதாகவும் அவ்வாறு கூட்டிச் செல்லும்போது பஸ்ஸின் சாரதி வல்லுறவுக்கு உட்படுத்திய விடயத்தை சட்ட வைத்திய அதிகாரியிடம் கூறக்கூடாது என கோரி பல முறை இடுப்பில் அடித்ததாகவும்  பாதிக்கப்பட்ட சிறுமி செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், சட்ட வைத்திய அதிகாரியின் முன்னால் தனக்கு நடந்த விடயங்கள் அனைத்தையும் தான கூறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.  

இச்சம்பவம், ஹப்புத்தலை பொலிஸல் முறைப்பாடு செய்த போதிலும் பொலிஸார்  எதுவித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என சிறுமியின் பெற்றோர் பொலிஸார் ஆணைக்குழுவிடம் கூறியுள்ளனர்.

சந்தேக நபர் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படாமல் விடுதலை செய்யப்பட்டார்.
தாம் இன,மத ரீதியாக சிறுபான்மையினர் என்பதால் நீதிக்கான தமது கோரிக்கையை பொலிஸார் உதாசீனம் செய்தனர் எனவும் பெற்றோர் கூறியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X