2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

21,000 இடம்பெயர் மக்கள் வாக்களிக்க முடியாமல் போகலாம்: பவ்ரல்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 03 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செட்டிகுளம் நலன்புரி நிலையத்திலுள்ள 18,000 இடம்பெயர் மக்களுக்கும் புத்தளம் மாவட்டத்திலுள்ள 3,000 இடம்பெயர் மக்களுக்கும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலாமென  நீதியானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான பவ்ரல் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையாளர் மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தின்போது இது உறுதிப்படுத்தப்பட்டதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி கூறினார்.

தேர்தல் ஆணையாளர் இந்த மக்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்வதற்கான ஏற்பாடு, உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் தொடர்பான சட்டங்களில் இல்லையென இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார். (YP)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--