2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு

Menaka Mookandi   / 2010 ஜூலை 14 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் சில பகுதிகளில் இன்று நண்பகல் 12 மணிமுதல் நாளை நண்பகல் 12 மணிவரையான 24 மணிநேரங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.

அம்பத்தளை பகுதியிலுள்ள நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் மேற்படி சபை கூறியது.

இந்நிலையில், கிராண்ட்பாஸ், மட்டக்குளி மற்றும் கொட்டாஞ்சேனை போன்ற பிரதேசங்களிலேயே இந்த நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, வெடிப்புக்குள்ளாகியுள்ள நீர் விநியோகக் குழாயினைத் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--