2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

வெலிக்கடை கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைக் காரணமாக மேலும் 11 சடலங்கள் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதுடன்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 70 இற்கும் மேற்பட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சர் சந்தரசிறி கஜதீர தெரிவித்தார்.

'வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் இதுவரை 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 6 சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் 11 சடலங்பக்ள இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து ஆராய்வதற்காக 3 உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்" என  அவர் மேலும் தெரிவித்தார்.

'தேடுதல் நடவடிக்கையினை தொடர்ந்து 6 கைதிகளின் சடலங்களை இன்று மீட்டுள்ளோம். ஏற்கனவே 16 சடலங்கள் நேற்றிரவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளன' என இராணுவ பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, சிறைச்சாலைக்குள் மேலும் தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸாரும் சிறைக்காவலர்களும் இணைந்து முன்னெடுத்துள்ளதுடன்  சடலங்களின் எண்ணிக்கை உயர்வடையலாமென தெரிவிக்கப்படுகின்றது.

கலவரத்தின்போது தானியங்கி துப்பாகிகள் உட்பட 82 துப்பாகிகள் கைதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் குறைந்தது ஒரு சிறைக்காவலர் உள்ளடங்குவதாகவும் 13 பொலிஸார்  4 சிப்பாய்கள் உள்ளடங்களாக 43 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. (எஎப்பி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .