Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 20 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஸ் கட்டணங்கள் கணிசமானளவு அதிகரிக்கப்படுவதுடன் தேசிய போக்குவரத்துக் கொள்கையின் குறைபாடுகளால் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் இல்லாவிட்டால் ஜூன் 27 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
தமது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை 27 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும். வீதிகளில் பஸ்கள்ஓடாது என அவர் கூறினார்.
அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்விடயத்தில் தலையிட்டு, தனியார் பஸ் உரிமையாளரகளுக்கு நிவாரணம் வழங்கினால் தமது தொழிற்;சங்க நடவடிக்கையை ஓகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கத் தயார் எனவும் கெமுனு விஜேரட்ன கூறினார்.
தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக உயர் நீதிமன்றத்தின் தலையீட்டை நாட நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
10 minute ago
33 minute ago
40 minute ago
1 hours ago
bis Monday, 20 June 2011 11:44 PM
எப்பதான் ஒங்கட பஸ் ஓடின?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
33 minute ago
40 minute ago
1 hours ago