2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இந்திய - இலங்கை கடற்படைகளுக்கிடையில் செப்டெம்பர் 29 இல் பேச்சுவார்த்தை

Super User   / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(காந்த்ய சேனாநாயக்க)


இலங்கை கடற்படை, இந்திய கடற்படை மற்றும் கரையோர காவற் படையினருக்கிடையில் செப்டெம்பர் 29 ஆம் திகதி நடைபெறும்  கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் தமிழக மீனவர்கள் விவகாரமும் அடங்கியிருக்கும் என கடற்படைப் பேச்சாளர் கப்டன் அதுல் செனரத் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.


இந்திய - இலங்கை கடல் எல்லைப் பகுதியில் இந்திய கடற்படைக் கப்பலொன்றில் இச்சந்திப்பு நடைபெறும் எனவும் கப்டன் செனரத் தெரிவித்தார். இலங்கை இந்திய கடற்படைத் தளபதிள் பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
 

இதேவேளை தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது குறித்து ஆராய்வதற்காக இந்திய இலங்கைக் கடற்படையினருக்கிடையில் அவசர சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 

இது தொடர்பாக கப்டன் செனரத்திடம் கேட்டபோது இவ்விவகாரம் குறித்தும் செப்டெம்பர் 29 ஆம் திகதி நடைபெறும் சந்திப்பில் கலந்துரையாடப்படும் என பதிலளித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .