Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 13 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவப் பொறியியலாளர்களால் மொத்தமாக 307,200 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டும் அழிக்கப்பட்டுமுள்ளன. இன்னமும் 1,872 சதுர கிலோமீற்றர் பரப்பளவு நிலத்தில் கண்ணிவெடி அகற்றப்பட்டு வருவதாகவும்; இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலேயே இந்த கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடக்கு மற்றும் கிழக்கில் அண்மையில் 1,300 படை வீரர்கள் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கையில் உள்ளூர் அமைப்புக்களுடன் இணைந்து பல சர்வதேச அமைப்புக்கள் ஈடுபட்டிருந்தன. ஒட்டுசுட்டான் மற்றும் நெடுங்கேணி பகுதிகளில் முற்றாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் பரந்தனிலிருந்து முகமாலை வரை, கொக்காவில், மன்னார் ஆகிய பகுதிகளில் தற்போது கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகியவை உள்ளடங்கலாக வன்னியில் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் வீதிகளிலும் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளன.
முகமாலை மற்றும் ஆணையிறவிலிருந்து பரந்தன் வரையான ஏ – 9 வீதியில் இராணுவத்தினர் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் தற்போது இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் கொக்காவில், மன்திவு, துணுக்காய் ஆகிய பகுதிகளிலும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுவரெனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
20 minute ago
29 minute ago
52 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
52 minute ago
55 minute ago