2025 ஜூலை 12, சனிக்கிழமை

'எல்லை நிர்ணயம்': 31 வரை கருத்துக்களை தெரிவிக்கலாம்

Kanagaraj   / 2013 ஜனவரி 01 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய எல்லை நிர்ணய குழு தனது அறிக்கையை மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கும் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்  பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்க தெரிவித்தார்.

புதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமைக்கு அமைய உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்காக புதிய வட்டாரங்களை உருவாக்குவதற்கான சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையையே இந்த குழு சமர்ப்பிக்கவிருக்கின்றது.

புதிய முறைமையின் பிரகாரம் 70 சதவீதமானவர்கள் தொகுதிவாரியாகவும் 30 வீதமானவர்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

'எல்லை நிர்ணயம்' தொடர்பில் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை இம்மாதம் 31 ஆம் திகதி வரை கொடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .