2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

3174 பட்டதாரிகளுக்கு அழகியற்கலை ஆசிரியர் நியமனம்

Super User   / 2011 ஜூன் 16 , பி.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

3174 பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் அழகியற்கலை ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.

இதற்கான அனுமதியை அமைச்சரவையை வழங்கியுள்ளதாகவும் ஜூலை முதலாம் திகதி இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் தயாராகிவிடும் எனவும் தமிழ் மிரரின் சகோதர ஊடகமான டெய்லி மிரருக்கு அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

'இதற்காக 5000 பேர் விண்ணப்பித்தனர். அதனால் பரீட்சைகள் திணைக்களம் அவர்களுக்கு பரீட்சையொன்றை நடத்தியது. அவர்களில் 704 பேர் மாத்திரமே வெட்டுப்புள்ளியைவிட கூடுதலான புள்ளிகளைப் பெற்றனர். எனினும் அதைவிட குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கி நியமனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்தது. தற்பொது 3174 பட்டதாரிகள் சேர்க்கப்படவுள்ளனர்' என அவர் கூறினார்.

இவர்கள் பாடசாலைகளில் இசை, நடனம், கலை, நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கு நியமிக்கப்படவுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .