Kogilavani / 2011 பெப்ரவரி 18 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சந்துன் ஏ.ஜயசேகர)
மார்ச் 17 இல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 320,608 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிடும்போது இது குறைந்த வாக்காளர்கள் வருகையை காட்டுகின்றது என தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கான காரணங்கள் பல உள்ளன. தேர்தல் முறையில் நம்பிக்கை இல்லாது போனமை, அரசியல் தெரிவுகள் அதிகம் இல்லாமை, அரசாங்க ஊழியர்கள் அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்தமை என்பன வாக்காளரிடம் அசமந்த போக்கை கொண்டுவர காரணமாயின என பவ்ரல் அமைப்பின் பிரதம தலைவர் றோகனை ஹெட்டியாராச்சி கூறினார்.
இந்த தேர்தலில் 50 சதவீதத்திற்கு குறைவான வாக்காளர்களே வாக்களிப்பில் கலந்து கொள்வர் என அவர் எதிர்வு கூறினார்.
இன்றுடன் 54 தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
இதே சமயம் 'தேர்தல் கண்காணிப்புக்கான வலையமைப்பு' இதுவரை 83 தேர்தல் வன்முறை சம்பவங்கள் தமக்கு அறிவிக்கப்பட்டதாக கூறியுள்ளது.
21 minute ago
31 minute ago
45 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
45 minute ago
50 minute ago