2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

வீடியோ குறித்த தகவல்களை சனல் 4 தருமென எதிர்பார்க்க முடியாது: நல்லிணக்க ஆணைக்குழு

Super User   / 2011 ஜூன் 20 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

'இலங்கையில் யுத்த குற்றம் நடந்ததற்கு ஆதாரமென கூறப்பட்ட, சனல் 4 தொலைக்காட்சியினால் 2009 ஆம் ஆண்டு ஒலிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் பற்றி சனல் 4 தொலைக்காட்சி எழுத்து வடிவில் எந்த விளக்கமும் தர மறுத்தது. இந்த நிலையில் அண்மையில் ஒளிபரப்பிய வீடியோ காட்சிகள் பற்றிய தகவல்களை அது தருமென எதிர்பார்க்க முடியாது' என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இன்று திங்கட்கிழமை தெரிவித்தது.

ஜூலை 14 இல் சனல் 4 ஒளிபரப்பிய வீடியோ காட்சிகளை ஆராய இந்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளபோதிலும் இந்த விசாரiணைய எவ்வாறு கொண்டு செல்லாம் என இன்னும் தீர்மானிக்கவில்லை என  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க கூறினார்.

நாம் முன்னைய ஒளிபரப்பு தொடர்பில் சில பின்புல விபரங்களை சனல் 4 இடம் கேட்டுள்ளோம். வீடியோ எடுக்கப்பட்ட இடம், எடுக்கப்பட்ட நேரம், வீடியோவை பதிவு செய்தவர்கள் பற்றிய விபரங்களையும் நாம் கோரினோம். ஆனால் எந்த விபரமும் தரப்படவில்லை என அவர் கூறினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சனல் 4 பற்றிய சர்வதேச சமூகத்தின் கேள்விகளுக்கு பதில் கூறப்படுமா எனக் கேட்கப்பட்டபோது ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு அது அறிக்கையில், காணப்படும் என விக்கிரமசிங்க கூறினார்.
 


  Comments - 0

  • ajan Tuesday, 21 June 2011 05:39 PM

    comedy LLRC:P LOL NALLINAKKA KULU ILLAI LANKVIN NALINTHUPONA KULU:P

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .