Super User / 2010 ஒக்டோபர் 15 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது நான்கு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதற்கு நான்கு ஊடக அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
எமது சகோதர பத்திரிகையான டெய்லிமிரர் படப்பிடிப்பாளர் பிரதீப் தில்ருக்ஷன உட்பட நான்கு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற போது பொலிஸ் கான்ஸ்டபிள்களினால் விகாரமகாதேவி பூங்காவிற்கு முன்னால் வியாழக்கிழமை மாலை தாக்கப்பட்டனர்.
செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை ஐந்து ஊடக இயக்கங்களின் உறுப்பினர்கள் கண்டிப்பதாகவும் ஊடக அடையாள அட்டையை காட்டிய பின்னரே அவர்கள் தாக்கப்பட்டதாகவும் சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களை தாக்கிய பொலிஸாரை விசாரணை செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பதில் தலைவர் ஞாடந் கொத்திக்கொட பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா பேரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கம் ஆகியன இணைந்தே கண்டனம் தெரிவித்துள்ளன.
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago