Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் போது, டெங்கு பெருக்கக் கூடிய வகையில் வீடுகளை வைத்திருந்த 4,464 பேரை சுகாதார அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதுடன் 92,447 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 67,00 நுளம்பு பரவும் இடங்கள் மற்றும் 11,002 நுளம்பு பரவக் கூடிய இடங்கள் சுகாதார அதிகாரிகளால் இனங்காணப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று சனிக்கிழமை வரை 285,918 வீடுகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
முதல் மூன்று நாள் பிரச்சாரத்தின் போது வடமேல், சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்கள் அதிக அபாயமான இடங்களாக அடையாளம் காணப்பட்டன.
இச்சோதனையின் போது வீடுகள் மாத்திரமல்லாமல் ஆரம்ப பாடசாலைகள், மயானங்கள், பாடசாலைகள் மற்றும் ஏனைய பொது இடங்களும் சுகாதார அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டன.
டெங்கு ஒழிப்பு வாரம் எனும் தொனிப் பொருளில் ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago