Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70யிற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு இவ்வருடம் முதல் பரீட்சை திணைக்களம் சான்றிதழ் வழங்கவுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்
மொத்தம் 200 புள்ளிகளுக்கு 70யிற்கு மேல் புள்ளிகளை பெறுபவர்கள் பரீட்சையில் சித்தியடைந்தவர்களாகவே கருதப்படுவர். அதனால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. அத்துடன் வெட்டுப் புள்ளிக்கு குறைய புள்ளிகளை பெறும் மாணவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளை பரீட்சையில் வீழ்ந்து விட்டதாக கருதுகிறார்கள் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தண தெரிவித்தார்.
வெட்டுப் புள்ளி நேரடியாக பாடசாலைகளுக்கே அனுப்பப்படும். பிரபல பாடசாலைகளுக்கான மாணவர்கள் தேர்வு நாடளாவிய ரீதியிலே தெரிவு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தரம் - 5 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என கல்வியியலாளர்களும், பல்கலைக்கழக பேராசிரியர்களும் கல்வி அமைச்சின் பாரளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையான மாணவர்களே பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் கல்வியமைச்சர் பந்துல குணவர்தண தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago
41 minute ago
1 hours ago