2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

உகண்டாவுடன் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

Menaka Mookandi   / 2012 நவம்பர் 14 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை மற்றும் உகண்டா அரசாங்கங்களுக்கு இடையில் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அலரி மாளிகையில் இரு நாடுகளினதும் ஜனாதிபதிகள் முன்னிலையில் இடம்பெற்றது.

இலங்கை – உகண்டாவுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் உகண்டாவில் தொழிற்பயிற்சி மத்திய நிலையமொன்றை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேச நிதி முதலீட்டு சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகமவும் உகண்டா ஜனாதிபதியின் பாரியாரும் அந்நாட்டு அமைச்சருமான ஜெனட் கடகா முஸாமி ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இரு நாட்டு பொருளாதார, வணிக மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் உகண்டா ஜனாதிபதியின் பாரியாரும் அந்நாட்டு அமைச்சருமான ஜெனட் கடகா முஸாமி ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

உல்லாசப் பயணத்துறை தொடர்பான ஒப்பந்தமொன்றும் இரு நாடுகளினதும் அரசியல் ஆலோசனை விவகாரம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் இதன்போது கைச்சாத்திடப்பட்டன.

இறுதியாக, கலாசாரத்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கலாசாரத்துறை அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க மற்றும் உகண்டா ஜனாதிபதியின் பாரியாரும் அந்நாட்டு அமைச்சருமான ஜெனட் கடகா முஸாமி ஆகியோர் கைச்சாத்திட்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .