2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

கண்டியில் தொடர்ந்தும் மழை; 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 12 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில தினங்களாக கண்டி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 50ற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

கண்டி மாவட்டத்துக்கு உட்பட்ட ஹாரிஸ்பத்துவ, கலகெதர, அக்குறணை, கலஹா, தெல்தோட்டை, பன்வில, குண்டசாலை போன்ற பகுதிகளிலுள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன. இதேவேளை, கலஹா, அம்பலமதன தோட்டத்திலுள்ள மூன்று வீடுகள் இடி, மின்னல் காரணமாக முற்றாக சேதமடைந்துள்ளன.

இடி மின்னல், மரம் முறிந்து விழுதல், வெள்ளத்தினால் அரிக்கப்படுதல், கடும் காற்று காரணமாக கூரைகள் சேதமாதல் உட்பட பல சம்பவங்கள் மூலம் மேற்படி வீடுகள் பாதிப்படைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கண்டி பிரதேசத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக அப்பிரதேசத்திலுள்ள பல வீதிகளின் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .