Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூன் 19 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 500 பேர் இம்மாத இறுதியில் சமூகத்துடன் ஒன்றிணைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
விடுதலை செய்யப்படவுள்ளோரில் பெரும்பாலானோர் தொடர்ச்சியாக நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் சிலர் அங்கவீனமானவர்கள் பலர் குடும்பப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளவர்கள் எனவும் அவர் கூறினார்.
'சிலரின் பிள்ளைகள் நோய்களுக்குள்ளானவர்கள் எனவும் அவர் கூறினார். இவர்கள் அனைவருக்கும் புனர்வாழ்வு பணியகத்தினால் அவசியமான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன' என அவர் கூறினார்.
தற்போது புனர்வாழ்வு முகாம்களிலுள்ள முன்னாள்போராளிகள் மேசன், கைவிணைப் பொருட்கள் தயாரிப்பு, பெயின்ரிங் போன்றவற்றில் இறுதிச் சோதனை நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் திறமையையும் கல்வியறிவையும் விருத்தி செய்வதற்காக தொழிற்பயிற்சி, மொழி, தொடர்பாடல் பயிற்சி என்பன வழங்கப்பட்டுள்ளனவும் அவர் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் முன்னாள் போராளிகளுக்காக 24 புனர்வாழ்வு நிலையங்கள் இருந்தபோதிலும் தற்போது 9 நிலையங்கள் மாத்திரமே இருப்பதாகவும் அவர் கூறினார்.
சரணடைந்த 11700 போராளிகளில் 7200 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் 4500 பேர் புனர்வாழ்வு முகாம்களில் உள்ளனர் எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
32 minute ago
1 hours ago